உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

திருவள்ளூரில் காரில் கடத்திய ரூ.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் – இருவர் கைது

திருவள்ளூர் பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனர்.

சென்னை செங்குன்றம் அருகே பாடியநல்லூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையின் போது காரில் உரிய ஆவணங்களின்றி கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
திருவள்ளூரில் காரில் கடத்திய ரூ.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் – இருவர் கைது

திருவள்ளூர் மாவட்டம், சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் கட்டுக்கட்டாகப் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் காரை முழுமையாகச் சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.50 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் இருந்த இரண்டு பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலா பணமா என்பது குறித்தும், இந்தப் பணம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாரிடம் ஒப்படைக்கப்பட இருந்தது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50