கடலூர் மாவட்டத்தில் உள்ள தம்மனாம்பேட்டை, திருச்சோபுரம், நடுத்திட்டு, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் கோழிகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தன. இது குறித்து தகவலறிந்த கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டு, உயிரிழந்த கோழிகளின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பினர். இதில், கோழிகளுக்கு குறைந்த வீரியம் கொண்ட பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பது ஆய்வக முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கோழிகளுக்கு வழங்கப்பட்ட தீவனத்தில் நச்சுப் பொருட்கள் கலந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் நோய்த்தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் மூன்று மாதங்களுக்கு கோழிகளை விற்பனை செய்யவும், புதிய கோழிக்குஞ்சுகளைக் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, நோய் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன
கடலூரில் ஆயிரக்கணக்கான கோழிகள் திடீர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டத்தில் கோழிகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்த நிலையில், ஆய்வகப் பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கோழிப்பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்த சம்பவத்தில், ஆய்வகப் பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




