உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

லாரி ஓட்டுநர் தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கு, பாரபட்சமற்ற விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை, பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
லாரி ஓட்டுநர் தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், லாரியில் ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிச் சென்ற போது வாகனம் தீப்பிடித்துள்ளது. இது குறித்து புகார் அளிக்க செக்கானூரணி காவல் நிலையத்திற்குச் சென்ற அவர், அங்கு கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பணியில் இருந்த காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்யும் வகையில், வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கின் ஆவணங்களைப் பெற்று விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50