தமிழக காவல்துறையை வலுப்படுத்தும் வகையில்,10 ஆயிரம் புதிய காவலர்களை இந்த ஆண்டுக்குள் நியமிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதில் 5 ஆயிரம் பெண் காவலர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து, மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக 29,108 கூடுதல் காவலர் பணியிடங்கள் உருவாக்கப்படும். மேலும், நடப்பாண்டிலேயே 10 ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். காவல்துறையை நவீனமயமாக்க ரூ.212 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தடயவியல் மற்றும் நவீன கண்காணிப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும், பணியின் போது துணிச்சலுடன் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
தமிழக காவல்துறையில் 10,000 புதிய காவலர்கள் நியமனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழக காவல்துறையில் 10 ஆயிரம் புதிய பணியிடங்களை ஆறு மாதங்களுக்குள் நிரப்ப முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதில் 5 ஆயிரம் பெண் காவலர்கள் இடம்பெறுவார்கள்.
தமிழக காவல்துறையை வலுப்படுத்த 10 ஆயிரம் புதிய காவலர் பணியிடங்களை ஆறு மாதங்களுக்குள் நிரப்ப முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதில் 5 ஆயிரம் பெண் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் காவல்துறை நவீனமயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




