உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

கடனை மறைக்க கொள்ளை நாடகம் – போலீஸ் விசாரணையில் சிக்கிய இரும்பு வியாபாரி

ராசிபுரத்தில் கடன் பிரச்சினையை மறைக்க ரூ.2.5 லட்சம் பணம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளைபோனதாக நாடகமாடிய இரும்பு வியாபாரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடன் பிரச்சினையால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க, வீட்டில் ரூ.2.5 லட்சம் பணம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளைபோனதாக நாடகமாடிய இரும்பு வியாபாரியின் செயல் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
கடனை மறைக்க கொள்ளை நாடகம் – போலீஸ் விசாரணையில் சிக்கிய இரும்பு வியாபாரி!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ராம் நகரைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர் அப்பகுதியில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த தர்மராஜ், குடும்பத்தினருடன் தூங்கியுள்ளார். நேற்று காலை 6 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்த அவர், பீரோவில் வைத்திருந்த ரூ.2.5 லட்சம் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறினார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அந்த விசாரணையின் போது தர்மராஜ், அவரது மனைவி ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தர்மராஜை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, கடன் பிரச்சினையால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும் என அஞ்சி, கொள்ளை நடந்ததாக நாடகமாடியதை அவர் ஒப்புக்கொண்டார். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50