தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வெளிநாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கன்டெய்னரில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடைப்படையில், அந்த கன்டெய்னரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆவணங்களில் கால்சியம் கார்பனேட் எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், உள்ளே சுமார் 5 டன் கசகசா இருப்பது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 5 கோடி எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கசகசாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து, கன்டெய்னர் எந்த நாட்டிலிருந்து வந்தது, கடத்தல் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, இந்தப் பொருட்கள் எங்கு கொண்டு செல்லப்பட இருந்தன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான 5 டன் கசகசா பறிமுதல் - ஒருவர் கைது
தூத்துக்குடி துறைமுகத்தில் கால்சியம் கார்பனேட் என ஆவணப்படுத்தப்பட்ட கன்டெய்னரில் இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான 5 டன் கசகசா பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்தில் கால்சியம் கார்பனேட் எனக் குறிப்பிட்டு கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 5 டன் கசகசாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக ஒருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




