விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அமைந்துள்ள சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்தவர் செல்வகணபதி. விவசாயக் கூலித் தொழிலாளியான செல்வகணபதிக்கு திருமணமாகி, இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற செல்வகணபதி வீடு திரும்பாத நிலையில், இன்று காலை அறியனேரி கண்மாய் கரை அருகே வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கிடைந்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்ப இடத்திற்கு விரைந்து சென்ற சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார், உயிரிழந்த செல்வகணபதியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
விவசாயக் கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை
ராஜபாளையம் அருகே கண்மாய் கரையில் விவசாயக் கூலித் தொழிலாளி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் அருகே விவசாயக் கூலித்தொழிலாளி வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




