உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

விருதுநகரில் கடன் தொல்லையால் 10 வயது மகனை இரயிலில் தள்ளிக் கொன்றுவிட்டு தாயும் தற்கொலை

விருதுநகரில் கடன் தொல்லையால் 10 வயது மகனை இரயில் முன் தள்ளிக் கொன்றுவிட்டு, தாய் பாண்டிச்செல்வியும் தற்கொலை செய்துகொண்டார்

விருதுநகரைச் சேர்ந்த பாண்டிச்செல்வி கடன் பிரச்சினையால் மன உளைச்சலில், 10 வயது மகன் பிரதீப்பை ரயில் முன் தள்ளிக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து இரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
விருதுநகரில் கடன் தொல்லையால் 10 வயது மகனை இரயிலில் தள்ளிக் கொன்றுவிட்டு தாயும் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. இவருக்கு 15 வயதில் மகளும், 10 வயதில் பிரதீப் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கடன் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்த பாண்டிச்செல்வி, நேற்று மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கிச் சென்ற அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் முன் மகனைத் தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தற்கொலைக்கு முன்பாக கணவர் முத்துக்குமாருக்கு பாண்டிச்செல்வி அனுப்பிய வீடியோவில், கடனை அடைக்க முடியவில்லை என்றும், மகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறும் உருக்கமாகப் பேசியுள்ளார்.மேலும், இரயில் வருவதைக் கண்ட பிரதீப் தாயின் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்ற போதும், அவரைப் பிடித்து இரயில் முன் தள்ளிடில்லர். இந்நிலையில், பாண்டிச் செல்வியிடம் தினமும் ஆயிரம் ரூபாய் கந்துவட்டி வசூலிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி இரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50