மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க முதலமைச்சர் விஜய் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைப் பாதிக்கும் வகையில் கர்நாடக அரசு செயல்பட்டு வருவதாகவும், தமிழ்நாடு அரசு இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார். இதை தொடர்ந்து, காவிரி நீர் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், மேகதாது விவகாரத்தில் தனது தெளிவான நிலைப்பாட்டை முதலமைச்சர் விஜய் அறிவிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் வாய்திறக்க மறுக்கிறார் – எடப்பாடி பழனிசாமி
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க முதலமைச்சர் விஜய் மவுனம் காப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததுடன், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தினார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




