சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 4-வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதனால் மீன் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. ஜூன் மாதம் 17-ந்தேதி ஆந்திர மாநில கடலோர காவல்படையினர் தமிழ்நாடு மீனவர்களுக்குச் சொந்தமான 8 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநில மீன்வள ஆணையர் மற்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை அந்த படகுகள் விடுவிக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட படகுகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் காசிமேடு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட மீனவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக 800 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீன்பிடித் தொழில் மற்றும் துறைமுகம் சார்ந்த வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் அமைச்சர் மரிய வில்சன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில் படகு உரிமையாளர்கள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
காசிமேட்டில் 4-வது நாளாக போராட்டம் – மீனவர்களுடன் அமைச்சர் மரிய வில்சன் பேச்சுவார்த்தை
சென்னை காசிமேட்டில் படகுகளை விடுவிக்கக் கோரி நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் அமைச்சர் மரிய வில்சன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னை காசிமேட்டில் ஆந்திராவால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை விடுவிக்கக் கோரி நான்காவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. இதையடுத்து அமைச்சர் மரிய வில்சன் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




