உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

தண்ணீர் கம்பெனிக்குள் புகுந்த 7 அடி நீள நல்ல பாம்பு

சென்னை மதுரவாயலில் தண்ணீர் கம்பெனிக்குள் புகுந்த 7 அடி நீள நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாகப் பிடித்தனர்.

சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள தண்ணீர் கம்பெனிக்குள் புகுந்த 7 அடி நீள நல்ல பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்து வனப்பகுதியில் விட எடுத்துச் சென்றனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
தண்ணீர் கம்பெனிக்குள் புகுந்த 7 அடி நீள நல்ல பாம்பு

சென்னை மதுரவாயல் வெங்கடேஸ்வராநகர், பாரதி சாலையில் சசிகுமார் என்பவருக்கு சொந்தமான தண்ணீர் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனிக்குள் திடீரென 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கம்பெனி உரிமையாளர் சசிகுமார், உடனடியாக மதுரவாயல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கம்பெனிக்குள் பதுங்கியிருந்த பாம்பைப் பிடிக்க முயன்றனர். அப்போது தீயணைப்பு வீரர்களைக் கண்ட நல்ல பாம்பு திடீரென தலையை உயர்த்தி படம் எடுத்தபடி நின்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சாதுரியமாகச் செயல்பட்டு பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதியில் விடுவதற்காக தீயணைப்பு துறையினர் எடுத்துச் சென்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50