கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள கோப்பாடி கிராமத்தில் வாய்க்காலில் இருந்து 9 அடி நீளமும், 300 கிலோ எடையும் கொண்ட முதலை ஒன்று இன்று அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அந்த முதலை ராஜேந்திரன் என்பவரது வீட்டின் படிக்கட்டுக்கு கீழே பதுங்கியிருந்தது. அப்போது தெருநாய்களின் சத்தம் கேட்டு வெளியே வந்த ராஜேந்திரனை திடீரென முதலை தாக்கி கடித்தது.இதில் படுகாயமடைந்த ராஜேந்திரனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை முதலையிடமிருந்து மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலறிந்து வந்த வனத்துறையினர் முதலையை லாவகமாகப் பிடித்து அருகிலுள்ள ஏரியில் கொண்டு சென்று விட்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏரியில் தண்ணீர் குறையும் போது முதலைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதாகவும், அவற்றை வேறு பாதுகாப்பான இடத்தில் விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை கடித்து ஒருவர் படுகாயம்
கடலூர் காட்டுமன்னார் கோவில் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை கடித்ததில் ராஜேந்திரன் படுகாயமடைந்தார். வனத்துறையினர் முதலையைப் பிடித்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை, தெருநாய்களின் சத்தம் கேட்டு வெளியே வந்த ராஜேந்திரனை கடித்தது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வனத்துறையினர் முதலையைப் பிடித்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




