சென்னை மாதவரம் – மணலி சாலையில் குண்டும் குழியுமான சாலையால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், புழல் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகின்றார். இதையடுத்து, 4ஆம் தேதி மாலை வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்ற போது, மாதவரம் – மாத்தூர் சுங்கச்சாவடி அருகே சாலையில் இருந்த பள்ளத்தால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த எண்ணெய் லாரி அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலறிந்த பொதுமக்கள், சாலையைச் சீரமைக்கக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் மற்றும் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளால் சாலை மிகவும் மோசமடைந்துள்ளது. ஏற்கனவே இதே சாலையில் பல விபத்துகளில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து உயிர்ப்பலிகள் ஏற்படுவதால், சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாதவரம் – மணலி சாலையில் லாரி டயரில் சிக்கி மேலாளர் உயிரிழப்பு
மாதவரம் – மணலி சாலையில் பள்ளத்தால் ஸ்கூட்டரில் இருந்து விழுந்த தனியார் நிறுவன மேலாளர், பின்னால் வந்த லாரி மோதி உயிரிழந்தார்.
சென்னை மாதவரம் – மணலி சாலையில் குண்டும் குழியுமான பள்ளத்தில் ஸ்கூட்டரில் இருந்து விழுந்த தனியார் நிறுவன மேலாளர் சரவணன், பின்னால் வந்த எண்ணெய் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலை சீரமைக்கக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




