கிருஷ்ணகிரி மாவட்டம் சாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலன். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். தாதம்பட்டி கிராமத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு சென்று, பின்னர் அங்கிருந்து தனது ஊருக்கு திரும்புவதற்காக தாதம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்குப் பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், எதிர்பாராதவிதமாக வேலன் மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த வேலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கு நிற்காமல் தப்பிச் சென்றது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வேலனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, தப்பிச் சென்ற வாகனத்தை கண்டறியும் வகையில், தாதம்பட்டி பேருந்து நிறுத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் மற்றும் அதன் ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
போச்சம்பள்ளி அருகே வாகனம் மோதி இளைஞர் பலி - தப்பியோடிய ஓட்டுநருக்கு போலீஸ் வலை
போச்சம்பள்ளி அருகே வாகனம் மோதியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். நிற்காமல் தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கட்டிட மேஸ்திரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




