தாம்பரம் அருகே செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் தனக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்து, அதில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்த தனது தந்தையின் பெயரைத் திருத்தி பட்டா வழங்கக்கோரி தாம்பரம் வட்டாட்சியர் அலுவகத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவைப் பரிசீலித்து மேல் நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்வதற்காக சிட்லப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் பிரசாந்த் ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் ரூ.4,000 கொடுத்தால் போதும் என அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. மேலும் நேற்று மதியம் பணத்தை வழங்குமாறு மனோஜ் குமாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து மனோஜ் குமார், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர், போலீசாரின் அறிவுறுத்தலின்படி, அவர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ரசாயன பவுடர் தடவிய பணத்தை பிரசாந்திடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், பணத்தைப் பெற்ற பிரசாந்தை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் தரும் அறிக்கையை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
தாம்பரத்தில் ரூ.4,000 லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் கைது
செம்பாக்கத்தில் பட்டா பெயர் திருத்தத்துக்காக ரூ.4,000 லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் பிரசாந்த் கைது.
பட்டா பெயர் திருத்தத்துக்காக ரூ.4,000 லஞ்சம் பெற்ற சிட்லப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் பிரசாந்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




