திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் கோதமங்கலம் பகுதியில் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த முகமது யூசுப் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 83 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, கைது செய்யப்பட்ட முகமது யூசுப் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற நடவடிக்கைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், சட்டவிரோத மது விற்பனையில் தொடர்புடையவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து, சட்டவிரோத மது விற்பனை, புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வாளர் சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார்
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபர் கைது – 83 மதுபாட்டில்கள் பறிமுதல்
பழனி அருகே கோதமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு 83 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை முகமது யூசுப் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 83 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




