நெல்லையிலிருந்து தென்காசி நோக்கி நான்கு வழிச்சாலையில் மருத்துவக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நல்லூர் விலக்கு பகுதியில் உள்ள கடை அருகே, சிவலார்குளத்தைச் சேர்ந்த முருகன், குமார், கருப்பசாமி ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சிவலார்குளம் நோக்கிச் சென்றுள்ளனர். இந்நிலையில், இருசக்கர வாகனம் சாலையை கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக மருத்துவக் கழிவுகளை ஏற்றிச் சென்ற சரக்கு வேன் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த முருகன், குமார் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், கருப்பசாமி பலத்த காயமடைந்தார். இந்த தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த கருப்பசாமி முதலில் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலங்குளம் அருகே இருசக்கர வாகனமும் சரக்கு வாகனமும் மோதி விபத்து - இருவர் பலி
ஆலங்குளம் அருகே நல்லூர் பகுதியில் இருசக்கர வாகனமும் சரக்கு வாகனமும் மோதி விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நல்லூர் விலக்கு பகுதியில் நடந்த சாலை விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




