மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், லண்டன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் சென்றனர். அப்போது கருமாத்தூர் அருகே இருசக்கர வாகனம் சென்ற போது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் காயமடைந்த இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்போது மதுபோதையில் இருந்த ராமச்சந்திரன், தனது நண்பருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறி மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், மருத்துவ பணியாளர்களை தாக்கியதுடன், சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களின் டியூப்களை பிடுங்கி கையில் வைத்துக்கொண்டு உள்ளார். இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசாரிடமும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் அவரிடம் பேசியதில் தொடர்ந்து, இருவருக்கும் மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர்.மேலும், இச்சம்பவம் குறித்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் போதை இளைஞர் ரகளை
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் போதை இளைஞர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் போதை இளைஞர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலறிந்து வந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி, மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளிக்க உதவினர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




