திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை கொலை செய்துள்ளார். அந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக வீரபத்திரன் இருந்துள்ளார். இந்நிலையில் சாணார்பட்டி காவல் நிலையத்திற்கு மனைவியுடன் கையெழுத்து போடச் சென்றுள்ளார். அப்போது, வீரபத்திரன் நத்தம் ரோடு நொச்சி ஓடைப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது மர்ம கும்பல் சுற்றி வளைத்து அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த சாணார்பட்டி போலீசார் துரிதமாக செயல்பட்டு கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் ஆயுதங்களையும் கைப்பற்றினர். இதை தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சாணார்பட்டி அருகே வாலிபர் வெட்டிக்கொலை
சாணார்பட்டி அருகே மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் என்ற வாலிபர் வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே, முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




