திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் அங்கு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள், ராஜாவை பட்டாக் கத்தியால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திருத்தணி, பெரியார் நகரைச் சேர்ந்த சுசில் , அரக்கோணத்தைச் சேர்ந்த புவனேஷ், ஹரீஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதையடுத்து, போலீசாரின் விசாரணையில் ராஜாவின் இளைய மகள் தாளவேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பேசி வந்ததாகவும், அந்தப் பெண்ணை 17 வயது சிறுவன் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, அந்த இளைஞரை தாக்கியதுடன ராஜாவின் மகளுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து, ராஜாவின் மனைவி அளித்த புகாரின் பேரில், லாரன்ஸ் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இதற்கு பழிவாங்கும் வகையில், லாரன்ஸின் தம்பி சுசிலின் தூண்டுதலின் பேரில் அவரது நண்பர்களான புவனேஷ் மற்றும் ஹரீஷ் ஆகியோர் ராஜாவை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பட்டாக்கத்தியை 17 வயது சிறுவன் வழங்கி உதவியதாகவும் போலீசார் கூறுகின்றனர். கைது செய்ய முயன்றபோது தப்பியோட முயன்ற சுசிலுக்கு காலில் காயம் ஏற்பட்டதால், அவர் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணியில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் - பெண்ணின் தந்தையை வெட்டிக் கொன்ற 4 பேர் கைது
திருத்தணியில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் பெண்ணின் தந்தையை வெட்டிக் கொன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருத்தணியில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பெட்டிக்கடை வியாபாரி ராஜா பட்டாக்கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




