திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக சிறுமியின் தாய் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய அப்புவை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், அவருக்கு எதிரான ஆதாரங்களை சேகரித்து, வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், அப்புவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வள்ளியூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை
வள்ளியூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றவாளிக்கு நீதிபதி 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 1 லட்சம் அபதாரமும் விதித்து தீர்ப்பளித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அப்புவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
