நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் 204 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாதுரை சிலை அருகே அமர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாத ஊதியமாக ரூ.12 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுவதாகவும், விடுமுறை எடுத்தால் அந்த நாளுக்கான சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் பணியாளர்கள் தெரிவித்தனர். மேலும், ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்கு பின்னரே ஊதியம் வழங்கப்படுவதாகவும், பண்டிகை காலங்களில் விடுமுறை வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினர்.இது மட்டுமின்றி, பேட்டரி வாகனங்களை இயக்குவதற்கான செலவையும் தூய்மை பணியாளர்களே ஏற்க வேண்டிய நிலை உள்ளதாகவும், பணியின் போது பயன்படுத்துவதற்கான கையுறை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தனர். தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் திருச்செங்கோடு நகராட்சி ஆணையர் குமரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.இதனைத் தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர்.
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
திருச்செங்கோட்டில் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், சம்பள உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் பண்டிகை கால விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
