மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மழை சாலையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சதா பாறைகள் சாலையில் விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் ஆழியார் வன சோதனை சாவடியில் திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வரும் வாகனங்களை அட்டகட்டி பகுதியிலேயே வனத்துறையினர் நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மண் சரிவு மற்றும் பாறைகளை அகற்றும் பணிகள் நடைபெறு வருகிறது இந்த பணியினை பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பொள்ளாச்சி-வால்பாறை மலை சாலையில் மண் சரிவு - போக்குவரத்து துண்டிப்பு
பொள்ளாச்சி வால்பாறை மலை சாலையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சச பாறை சாலையில் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
பொள்ளாச்சி வால்பாறை மலை சாலையில் மண்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




