ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில், பெங்களூருவில் இருந்து கதிரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை, மத்தன்னகாரிபல்லி அருகே நான்கு இளைஞர்கள் நிறுத்த முயன்றுள்ளனர். அங்கு அதிகாரப்பூர்வ பேருந்து நிறுத்தம் இல்லாததால் ஓட்டுநர் வேமன்னா நாயக் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் பேருந்தைப் பின் தொடர்ந்து, வந்து கொக்கண்டி கிராஸ் பகுதியில் பேருந்தை வழி மறித்து ஓட்டுநரைக் கீழே இழுத்துத் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் தலையிட்டு ஓட்டுநரைக் காப்பாற்றியதுடன், நான்கு இளைஞர்களையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் ஓட்டுநர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விஸ்வநாத், மதுகுமார், சுனில், ராமு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பேருந்தை நிறுத்தாததால் ஓட்டுநர் மீது தாக்குதல் – 4 இளைஞர்கள் கைது
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில், பேருந்தை நிறுத்தாத கோபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரை நான்கு இளைஞர்கள் தாக்கியுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்தை நிறுத்தாததால் கோபமடைந்த நான்கு இளைஞர்கள், அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியுள்ளனர். பொதுமக்கள் தலையிட்டு ஓட்டுநரைக் காப்பாற்றி, நான்கு பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




