உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

மினி லாரியில் 35 கிலோ கஞ்சா கடத்தல் - இருவர் கைது

கள்ளக்குறிச்சி அருகே மினி லாரியில் 35 கிலோ கஞ்சா கடத்திய மதுரையைச் சேர்ந்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மினி லாரியில் 35 கிலோ கஞ்சா கடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த ரிஷி, ஆகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, கஞ்சா மற்றும் லாரியைப் பறிமுதல் செய்தனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
மினி லாரியில் 35 கிலோ கஞ்சா கடத்தல் - இருவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மினி லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எலவனாசூர்கோட்டை பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 35 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து லாரியில் வந்த 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ரிஷி, ஆகாஷ் என்பது தெரிய வந்தது. மேலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி மதுரைக்கு விற்பனைக்காக கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய மினி லாரி மற்றும் 35 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50