உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

கடையம் அருகே கழிவுநீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம் – ரேஷன் கடை ஊழியர்கள் மீது புகார்

தென்காசியில் கழிவுநீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை தொடங்கி நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

தென்காசி வடமலைப்பட்டி கிராமத்தில் கழிவுநீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
கடையம் அருகே கழிவுநீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம் – ரேஷன் கடை ஊழியர்கள் மீது புகார்

 தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வடமலைப்பட்டி கிராமத்தில், கழிவுநீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டதாக ரேஷன் கடை ஊழியர்கள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ரேஷன் கடையில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெயில் கழிவுநீர் கலந்திருப்பதாகக் கூறி, பொதுமக்கள் கொண்டு வந்த கேன்களில் மண்ணெண்ணெய் மிதக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இது குறித்து பொதுமக்கள் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பல மாதங்களாக வண்டு விழுந்த ரேஷன் அரிசி வழங்கப்பட்டதாகவும், இது குறித்து புகார் அளித்து போராட்டம் நடத்தத் திட்டமிட்ட பின்னரே அதிகாரிகள் தலையிட்டு தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தனர். தற்போது மண்ணெண்ணெயிலும் கழிவுநீர் கலந்திருப்பதாகவும், தரமான மண்ணெண்ணெய் வழங்கக் கேட்டபோது, தங்களுக்கு வந்ததைத்தான் விநியோகம் செய்வதாக ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாகவும் புகார் தெரிவித்தனர். இது குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் புகார் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், ரேஷன் கடை ஊழியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அந்த விசாரணை முடிந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50