தமிழக முதலமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த அவர், அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டைக்கு சென்றார். அப்போது சாலையில், திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய பயிர் வகைகள் கண்காட்சி மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் அரங்குகளை பார்வையிட்டார். மேலும், விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவில் 104 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, தையல் இயந்திரங்கள், வங்கிக் கடன் உதவிகள், டிராக்டர்கள், வேளாண் கருவிகள் மற்றும் கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டையில் ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் – முதலமைச்சர் விஜய்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் விஜய் பயனாளிகளுக்கு வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் விஜய் பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




