உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

12 வயது சிறுமியுடன் பழகிய கல்லூரி மாணவர் இரும்பு ராடால் அடித்துக் கொலை – சிறுமியின் தந்தை தலைமறைவு

12 வயது சிறுமியுடன் பழகிய கல்லூரி மாணவரை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்த சிறுமியின் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே 12 வயது சிறுமியுடன் கல்லூரி மாணவர் பழகியதால் கோபமடைந்த சிறுமியின் தந்தை, இரும்பு ராடால் தாக்கி கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
12 வயது சிறுமியுடன் பழகிய கல்லூரி மாணவர் இரும்பு ராடால் அடித்துக் கொலை – சிறுமியின் தந்தை தலைமறைவு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் கிராமத்தில்அதே கிராமத்தைச் சேர்ந்த அபிமன்யூ என்ற கல்லூரி மாணவர், 12 வயது சிறுமிக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து அவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், இதனை அறிந்து கொண்ட சிறுமியின் தந்தையும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான பாலசுப்பிரமணியன் கோபமடைந்துள்ளார். இதையடுத்து, அபிமன்யூவிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், வாக்குவாதம் முற்றிய நிலையில், இரும்பு ராடால் அபிமன்யூவை தாக்கியதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியால் மார்பில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அபிமன்யூ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,கொலை செய்துவிட்டு தப்பியோடிய பாலசுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50