சிவகங்கை மாவட்டம் பாகனேரி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னி. இவரது கணவர் சமீபத்தில் உயிரிழந்ததால், வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் இரவு நேரங்களில் தூங்குவது வழக்கம். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடை வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பொன்னியின் தலையில் மர்ம நபர்கள் கல்லைப் போட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, மறுநாள் காலையில் மூதாட்டி ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் மதகுபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படியில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார். மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்தக் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி தலையில் கல்லைப் போட்டு கொடூரக் கொலை
பாகனேரியில் கடை வாசலில் தூங்கிய மூதாட்டி தலையில் கல்லைப் போட்டு கொலை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் கடை வாசலில் தூங்கிக் கொண்டிருந்த 75 வயது மூதாட்டி தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




