தருமபுரி மாவட்டம் பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தன். இவரது மனைவி சின்னபாப்பா. இவர்களது மகன் தேவராஜ். இவர் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் ஆகஸ்ட் 3ஆம் தேதி, போலீஸ் தொப்பி அணிந்து கையில் கத்தியுடன் சாலையில் சென்ற பொதுமக்களை விரட்டியதுடன், வீரமணி என்பவரைத் தாக்க முயன்றுள்ளார். இதையடுத்து இண்டூர் போலீசார் அவரைக் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து, 28ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், அதிக செலவு செய்து ஜாமீனில் எடுத்துள்ளதால் இனிமேல் பிரச்சினை செய்யாமல் வேலைக்குச் செல்லுமாறு தாயார் சின்னபாப்பா அறிவுரை கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த தேவராஜ், தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீட்டின் கதவை உள்பக்கமாகப் பூட்டியுள்ளார்.பின்னர் இரும்பு ராடால் தாயாரைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவலறிந்து வந்த இண்டூர் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், கொலை வழக்குப்பதிவு செய்து தேவராஜைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி அருகே தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன் கைது
தருமபுரி மாவட்டம் பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தன். இவரது மனைவி சின்னபாப்பா (45). இவர்களது மகன் தேவராஜ் (20), கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி, போலீஸ் தொப்பி அணிந்து கையில் கத்தியுடன் சாலையில் சென்ற பொதுமக்களை விரட்டியதுடன், வீரமணி என்பவரைத் தாக்க முயன்றுள்ளார். இதையடுத்து இண்டூர் போலீசார் அவரைக் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 28ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில்,
தருமபுரி அருகே ஜாமீனில் வெளியே வந்த மகன், வேலைக்குச் செல்லுமாறு அறிவுரை கூறிய தாயுடன் ஏற்பட்ட தகராறில் இரும்பு ராடால் தாக்கிக் கொலை செய்தார். இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




