சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்தது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை தாம்பரம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து மலைப்பாம்பை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பாதுகாப்பான வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் முடிவு செய்தனர்.வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் வனப்பகுதிகள் அருகே அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் அவ்வப்போது பாம்புகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் தென்பட்டால் பொதுமக்கள் அவற்றை பிடிக்க முயற்சிக்காமல் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெருங்களத்தூர் குடியிருப்புக்குள் 6 அடி மலைப்பாம்பு
பெருங்களத்தூர் ஆலப்பாக்கம் குடியிருப்பு பகுதியில் புகுந்த 6 அடி மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து, பாதுகாப்பான வனப்பகுதியில் விட முடிவு செய்தனர்.
சென்னை பெருங்களத்தூர் ஆலப்பாக்கம் குடியிருப்பு பகுதியில் சுமார் 6 அடி நீள மலைப்பாம்பு புகுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் பாம்பை பிடித்து வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று, பாதுகாப்பான வனப்பகுதியில் விட முடிவு செய்தனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




