பெரம்பலூர் மாவட்டம் கொளத்தூர் கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் கொளத்தூர் கிராமம் மேற்கு தெருவில் வசிக்கும் சிவசங்கருக்கும், எனது கணவர் சுந்தர்ராஜனுக்கும் இடையே அரசு ஒப்பந்தம் கோறியது தொடர்பாக கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து வழக்கம் போல் ஏற்பட்ட தகராறில், எனது கணவர் சுந்தர்ராஜனை, சிவசங்கரும் அவரது ஆதரவாளரான சிவசூரியன் என்பவரும் சேர்ந்து இரும்பு கம்பி மற்றும் உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினார்கள். அந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த எனது கணவர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உன் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நான் வீட்டின் படுக்கையறையில் தனியாக இருந்த போது, மேற்படி சிவசங்கர் எனது வீட்டிற்குள் அத்து மீறி உள்ளே நுழைந்து, கழுத்தைப் பிடித்து நெறித்து, உனது வீட்டுக்காரனை உடனே வர சொல்லுடி, என வாய்க்கு வந்தபடி ஆபாசமாக மனம் நோகும்படி திட்டி பேசினார். இதனால் பயந்து போய் நான் சத்தம் போட்டதால் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து சமாதானம் செய்து என்னை சிவசங்கரிடமிருந்து காப்பாற்றினர். இது தொடர்பாக நான் மீண்டும் மருவத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிவசங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தனது குடும்பத்தினர் அச்சத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட மகாலட்சுமி, சிவசங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். புகார் மனுவைப் பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லலித் குமார், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
பெரம்பலூர் அருகே திமுக நிர்வாகி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்
பெரம்பலூர் அருகே தவெக நிர்வாகியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் திமுக இளைஞரணி நிர்வாகி சிவசங்கர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது மனைவி எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.
பெரம்பலூர் அருகே அரசு ஒப்பந்தம் தொடர்பான முன்விரோதத்தில், தவெக நிர்வாகி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது மனைவி மகாலட்சுமி எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். ஏற்கெனவே மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி உறுதியளித்துள்ளார்.
Team - Editorial

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




