சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சி.எஸ்.ஐ. பள்ளி வளாகத்தில் ஈஸ்வரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த நேரத்தில், மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.அப்போது வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி மல்லிகாவை கொலை செய்த மர்ம நபர்கள், அவரது காதுகள் மற்றும் மூக்கை அறுத்து, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்தக் கொலைக்கான காரணம் என்ன நகைக்காக மட்டுமே இந்தக் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் உள்ளதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணை கொலை செய்து, நகை பறிப்பு
மானாமதுரையில் வீட்டில் தனியாக இருந்த மல்லிகா என்ற பெண் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
மானாமதுரையில் வீட்டில் தனியாக இருந்த மல்லிகா என்ற பெண் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அவரது காதுகள், மூக்கை அறுத்து, அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




