தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. வீரபாண்டி அருகே போடேந்திரபுரம் விலக்கு பகுதியில் பேருந்து சென்றபோது, எதிரே வந்த டிராக்டர் மீது அரசு பேருந்து மோதியது. அப்போது, டிராக்டருக்குப் பின்னால் போதிய இடைவெளியின்றி வந்த கார், டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த திருச்சி மாவட்டம், மருங்காபுரி கல்லுப்பட்டியைச் சேர்ந்த தமயந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிராக்டரை ஓட்டி வந்த சின்னமனூரைச் சேர்ந்த கிருஷ்ணன் பலத்த காயமடைந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், அரசு பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த விபத்து குறித்து தகவலறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், இது குறித்து அரசு பேருந்து ஓட்டுநர் முத்தையா மீது வழக்குப்பதிவு செய்து, இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனியில் அரசு பேருந்து டிராக்டர், கார் அடுத்தடுத்து மோதி விபத்து - இளம்பெண் பலி
தேனியில் அரசு பேருந்து டிராக்டர், கார் அடுத்தடுத்து மோதி விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே அரசு பேருந்து, டிராக்டர், கார் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணம் செய்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், டிராக்டர் ஓட்டுநர் உட்பட பலர் காயமடைந்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




