உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

திருவல்லிக்கேணியில் 7.301 கிலோ தங்க நகை மோசடி – ஒருவர் கைது

திருவல்லிக்கேணியில் வியாபாரியிடம் 7.301 கிலோ தங்க நகை வாங்கி பணம் தராமல் மோசடி செய்த வேப்பேரி நபர் கைது செய்தனர்.

சென்னையில் வியாபாரியிடம் 7.301 கிலோ தங்க நகைகளை வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்ததாக வேப்பேரியைச் சேர்ந்த மசூக் ஜெயின் என்பவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
திருவல்லிக்கேணியில் 7.301 கிலோ தங்க நகை மோசடி –  ஒருவர் கைது

சென்னை சவுகார்பேட்டை இருளப்பன் தெருவில் சீராக் என்பவர் நகைக்கடை மற்றும் பட்டறை நடத்தி வருகின்றார். இந்நிலையில், நகைக்கடை உரிமையாளர் சீராக்கிடம், வியாபாரத்தின் மூலம் அறிமுகமான வேப்பேரியைச் சேர்ந்த மசூக் ஜெயின், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஐந்து தவணைகளாக தங்க நகைகளை வாங்கிச் சென்றுள்ளார். ஆனால், அதற்கான பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததுடன், மட்டுமில்லாமல் தொலைபேசி அழைப்புகளையும் ஏற்காமல் தவிர்த்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட வியாபாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில், 27ஆம் தேதி மசூக் ஜெயினை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்டவரிடம் இந்த நகை மோசடி தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
திருவல்லிக்கேணியில் 7.301 கிலோ தங்க நகை மோசடி – ஒருவர் கைது | விசில் மீடியா