உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

திருச்சி அருகே முன்விரோதத்தில் முதியவர் அடித்துக்கொலை – பெண் உள்பட மூவர் கைது

திருச்சி அருகே முன்விரோதம் காரணமாக முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி அருகே முன்விரோத தகராறில் 65 வயது முதியவர் இரும்புக் கம்பி மற்றும் பாட்டிலால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து கொலை வழக்காக மாற்றினர்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
திருச்சி அருகே முன்விரோதத்தில் முதியவர் அடித்துக்கொலை – பெண் உள்பட மூவர் கைது

திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே கொடியாலம் வடக்கு புலிவலத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் அருகிலுள்ள வயலில் நாற்று நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி, மகாமணி மற்றும் சித்ரா ஆகியோர் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தகராறு முற்றிய நிலையில், மகாமணி இரும்புக் கம்பியாலும், வீரமணி பாட்டிலாலும் நடராஜனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து நடராஜனின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் மூவரையும் கைது செய்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். இதையடுத்து, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றி, மூவர் மீதும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50