உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தவெக எம்எல்ஏக்கள் மீதான சர்ச்சைகள் தொடர்பாக தமிழ்நாட்டு அரசையும், முதலமைச்சர் விஜயையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தவெக எம்எல்ஏக்கள் தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெறும் எச்சரிக்கைகள் விடுப்பதை விட செயல்பாட்டில் கண்டிப்பைக் காட்ட வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தவெக எம்எல்ஏக்கள் மீதான சர்ச்சைகள் தொடர்பாக தமிழ்நாட்டு அரசையும், முதலமைச்சர் விஜயையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.மாமல்லபுரம் அருகே நடைபெற்ற தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் தவறான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகின.இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், தவறு செய்தால் விடமாட்டேன் என முதலமைச்சர் விஜய் தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியானது வெறும் சேதாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கை என விமர்சித்துள்ளார். மேலும், முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானதாக இருந்தால், சட்டப்பேரவை துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், சம்பந்தப்பட்ட இருவருக்கும் தீபாவளிப் பரிசு வழங்கி அனுப்பி வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், இது தான் முதலமைச்சரின் கடுமையான நடவடிக்கையா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வெறும் பஞ்ச் வசனங்களைப் பேசி காலத்தை ஓட்டுவது சினிமா அல்ல என்றும், முதலமைச்சர் உண்மையிலேயே எவ்வளவு கண்டிப்பானவர் என்பதைச் செயல்பாட்டின் மூலம் நிரூபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். வெறும் பேச்சுகளால் எந்தப் பயனும் இல்லை, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50