உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

டீசல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பிய நபர்

நெல்லையில் சொகுசு கார் ஒன்று பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஆட்சிமடம் என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில், அதிகாலை டீசல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் சொகுசு கார் ஒன்று மின்னல் வேகத்தில் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஆட்சிமடம் என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பெட்ரோல் பங்கிற்கு அதிகாலை நேரத்தில் வந்த சொகுசு கார் ஒன்று ரூ. 3,500-க்கு டீசல் நிரப்பியது. இதனை தொடர்ந்து, டீசலை நிரப்பிய சொகுசு கார், டீசலுக்கான பணத்தை கொடுக்காமல் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டீசலுக்கான பணத்தை கொடுக்காமல் வேகமாக காரை இயக்கிய நபர், பெட்ரோல் பங்கில் இருந்து தப்பியோடும் காட்சிகள், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்து கிடைத்த தகவலின் பேரில், தப்பியோடிய நபரை, காவல்துறையினர் தேடி வருகின்றனர். டீசல் நிரப்பிவிட்டு தப்பி சென்ற கார், நம்பர் இல்லாத கார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
டீசல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பிய நபர் | விசில் மீடியா