செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பையனூர் பகுதியில் உள்ள ஓ.எம்.ஆர். சாலையில் இன்று காலை அரசு மாநகர பேருந்தும், தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேனும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் வேன்நொறுங்கியது. இதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சாலையின் குறுக்கே மாடு வந்ததால், அதன் மீது மோதுவதைத் தவிர்க்க வேன் ஓட்டுநர் வாகனத்தைத் திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்திசையில் கவிழ்ந்த நிலையில், அவ்வழியாக வந்த அரசு பேருந்து வேன் மீது பலமாக மோதியது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், காயமடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேன் ஓட்டுநர் மற்றும் ஒரு பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து வேன் மீது மோதி விபத்து - மூவர் பலி
செங்கல்பட்டு அருகே அரசு பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து. இதில் 3 பெண்கள் உயிரிழந்து, 20 பேர் காயமடைந்தனர்.
செங்கல்பட்டு அருகே பையனூரில் அரசு பேருந்தும் தனியார் நிறுவன ஊழியர்கள் சென்ற வேனும் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




