உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு – சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு – சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கம்பத்தில் இருந்து லாரியில் ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து புகார் அளிப்பதற்காக மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு பாலகிருஷ்ணன் சென்றுள்ளார். அந்த புகாரில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரை காவல் நிலையத்திலேயே இருக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் பாலகிருஷ்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பாலகிருஷ்ணனின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50