தமிழகத்தில் சிறைக் கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1995-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே நேரத்தில் இத்தனை கைதிகள் தப்பியது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.இது குறித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், சிறைக்குள் இருக்கும் கைதிகளைக்கூடக் கண்காணிக்க முடியாத நிலையில் தமிழக அரசு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்டுள்ள தற்போதைய காலகட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வெளியில் இருக்கும் குற்றவாளிகள் குற்றங்களில் ஈடுபடுவதும், சிறைக்குள் இருக்கும் கைதிகள் தப்பிச் செல்வதும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைக் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார். இதை தொடர்ந்து, மக்களைக் காக்க வேண்டிய அரசு தனது கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்றும், மக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம் - அரசை ஸ்டாலின் கடுமையாக விமர்சனம்
தமிழகத்தில் சிறைக் கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புழல், தேனி சிறைகளில் கைதிகள் தப்பிய சம்பவங்களைக் குறிப்பிட்டு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பாதுகாப்பு குறைபாடுகளால் அரசு தனது கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




