விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஏழு வயது சிறுமி காணாமல் போய் 11 நாட்களாகியும் கண்டுபிடிக்கப்படாததற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியை மீட்க முடியாமல் அரசு திணறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதைக் கண்டித்து, திமுக சார்பில் தரணிவேந்தன் எம்.பி. தலைமையில் செஞ்சி ஆலம்பூண்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும் உதயநிதி குறிப்பிட்டுள்ளார். மேலும், ராணிப்பேட்டையிலும் குழந்தை ஒன்று காணாமல் போய் சுமார் ஒரு மாதமாகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, தமிழகத்தில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.இதையடுத்து, முதலமைச்சர் தனது ரீல்ஸ் மோகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, குழந்தையைப் பிரிந்து தவிக்கும் குடும்பத்தின் துயரத்தை உணர வேண்டும் என்றும், காணாமல் போன சிறுமியை உடனடியாகக் கண்டறிய காவல்துறை மூலம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை - உதயநிதி கண்டனம்
செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி 11 நாட்களாகியும் கண்டுபிடிக்கப்படாததற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி 11 நாட்களாகியும் கண்டுபிடிக்கப்படாததற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து, ராணிப்பேட்டையிலும் குழந்தை மாயமான விவகாரத்தைச் சுட்டிக்காட்டிய அவர், காணாமல் போன குழந்தைகளை உடனடியாகக் கண்டறிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




