தென்காசி மாவட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளருமான அருண்ராஜ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். முன்னதாக தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு வருகை தந்த அமைச்சர் அருண்ராஜ், தமிழக வெற்றி கழகத்தின் அமைக்கப்பட்ட கடையநல்லூர் தெற்கு நகர அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான வி.கே. ராஜீவ், தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் நியாஸ் மற்றும் கடையநல்லூர் தெற்கு நகர செயலாளர் எஸ். பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர்: நகர அலுவலகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் அருண்ராஜ்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தவெக தெற்கு நகர அலுவலக திறப்பு
தென்காசி மாவட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளருமான அருண்ராஜ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். முன்னதாக தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு வருகை தந்த அமைச்சர் அருண்ராஜ், தமிழக வெற்றி கழகத்தின் அமைக்கப்பட்ட கடையநல்லூர் தெற்கு நகர அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான வி.கே. ராஜீவ், தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் நியாஸ் மற்றும் கடையநல்லூர் தெற்கு நகர செயலாளர் எஸ். பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Team - Editorial

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.