கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளறடை அருகே கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், கூதாழி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் தனது ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் வடிக்கும் பணிக்காகச் சென்றுள்ளார். அப்போது, புதர் மண்டிக் கிடந்த பகுதியில் இருந்து திடீரென காட்டுப் பன்றி ஒன்று அவரை நோக்கிப் பாய்ந்தது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக காட்டுப் பன்றி தன்னை நோக்கி வந்ததால் அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன், அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது, உடனடியாக ஓடித் தப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், அருகிலிருந்த இரப்பர் மரத்தின் மீது அவசரமாக ஏறியுள்ளார். அப்போது, மரத்தில் ஏறியதால் காட்டுப் பன்றியிடமிருந்து தப்பித்து விட்டார். ஆனால், மரத்தில் ஏறிப் பழக்கம் இல்லாத அவரால் மீண்டும் கீழே இறங்க முடியவில்லை. மரத்தின் உயரமான பகுதியில் இரண்டு கிளைகள் சந்திக்கும் இடத்தில் சிக்கிக்கொண்ட அவர், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார். இதையடுத்து, தன்னிடம் இருந்த செல்போனை எடுத்த ராதாகிருஷ்ணன், மரத்தில் சிக்கியிருந்த தனது நிலையை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். மேலும், பாறசாலை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, மரத்தின் உயரமான பகுதியில் சிக்கியிருந்த ஆசிரியரைப் பாதுகாப்பாகக் கீழே இறக்குவதற்கான மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்குப் பிறகு, ராதாகிருஷ்ணனைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். காட்டுப் பன்றியிடமிருந்து தப்பிக்க மரத்தில் ஏறிய ஆசிரியர், அதிலிருந்து இறங்க முடியாமல் சிக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கிய ஆசிரியர், சரியான நேரத்தில் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
காட்டு பன்றியிடம் இருந்து தப்பிக்க மரத்தில் ஏறிய ஆசிரியர்
வெள்ளறடை அருகே காட்டுப் பன்றியிடமிருந்து தப்பிக்க மரத்தில் ஏறி, இறங்க முடியாமல் தவித்த ஆசிரியரைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
கேரள மாநிலம் வெள்ளறடை அருகே, காட்டுப் பன்றியிடமிருந்து தப்பிக்க மரத்தில் ஏறிய ஆசிரியர் ராதாகிருஷ்ணன், கீழே இறங்க முடியாமல் தவித்தார். தனது ரப்பர் தோட்டத்தில் பணியில் இருந்தபோது ஏற்பட்ட இந்தச் சம்பவம் குறித்து, அவர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், மரத்தில் சிக்கியிருந்த ஆசிரியரைப் பத்திரமாக மீட்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




