திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரையாளம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். இவர் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஓய்வுக்குப் பிறகு கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பரசுராமன் தனது நண்பருடன் பயன்பாடில்லாத நிலத்தின் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதனைப் பார்த்த பரசுராமன், பெண்ணைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார்.இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்களும், ஆரணி தீயணைப்புத் துறையினரும் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது பரசுராமன் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. அவரை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர். கிணற்றில் விழுந்த பெண்ணும் உயிருடன் மீட்கப்பட்டார். அந்தப் பெண் இந்திராணி என்பது தெரிய வந்தது.இதையடுத்து, காயமடைந்த அவருக்கு முதலில் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் விழுந்த பெண்ணைக் காப்பாற்ற முயன்ற முன்னாள் எல்லை பாதுகாப்புப் படை வீரர் பலி
திருவண்ணாமலையில் கிணற்றில் விழுந்த பெண்ணைக் காப்பாற்ற முயன்ற முன்னாள் ராணுவ வீரர் நீரில் மூழ்கி பலி. பெண் உயிருடன் மீட்பு.
திருவண்ணாமலையில் கிணற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்ற முயன்ற முன்னாள் எல்லை பாதுகாப்புப் படை வீரர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். பெண் உயிருடன் மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




