உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

ஆலங்குளத்தில் லாரி மோதி ஒருவர் பலி - தப்பியோட முயன்ற ஓட்டுநர் கைது

ஆலங்குளத்தில் லாரி மோதி ஜார்ஜ் உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்ப முயன்ற லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சாலையைக் கடந்த போது லாரி மோதி ஜார்ஜ் உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்ப முயன்ற ஓட்டுநரைப் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:
ஆலங்குளத்தில் லாரி மோதி ஒருவர் பலி - தப்பியோட முயன்ற ஓட்டுநர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குறிப்பன் குளத்தைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் ஆலங்குளத்தில் பழைய கார் விற்பனையகம் நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று இரவு தென்காசி சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். பின்னர் சாலையைக் கடப்பதற்காக வாகனத்தை சாலையோரம் நிறுத்தி விட்டு நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி, எதிர்பாராதவிதமாக ஜார்ஜ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றார். இதைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் தங்களது வாகனங்களில் லாரியைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் ஓட்டுநரை ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த தகவலறிந்து வந்த போலீசார் ஜார்ஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லாரி ஓட்டுநரைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50