திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சடாசரம். இவர் 10 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய முதியவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த விசாரணையின் முடிவில் முதியவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து நீதிபதி சுரேஷ்குமார், குற்றவாளி சடாசரத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.
10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
10 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும் வழங்க உத்தரவிட்டது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




