உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தி.மு.க. நிர்வாகி உயிரிழப்பு

தூத்துக்குடி தி.மு.க. நிர்வாகி கிளாஸ்டன் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற போது நடுக்கடலில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி கிளாஸ்டன், விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற போது உவரி அருகே நடுக்கடலில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தி.மு.க. நிர்வாகி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் காந்திநகர் தெருவைச் சேர்ந்தவர் கிளாஸ்டன். இவர் 40-வது வார்டு தி.மு.க. நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வந்தார். இவர் 11 நாட்களுக்குப் பிறகு சக மீனவர்களுடன் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இந்நிலையில் உவரி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், அவருக்கு முதலுதவி அளித்ததுடன் படகை அவசரமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு திருப்பி வந்தனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கிளாஸ்டனை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், இது குறித்து கூடங்குளம் மரைன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50