உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

மதுபானக்கடையில் பாட்டிலுக்கு கூடுதல் ரூ.10 பணம் கேட்டதால் பேடிஎம் எந்திரத்தைத் தூக்கிக் கொண்டு ஓடிய வாலிபர்

மதுபானக்கடையில் பாட்டிலுக்கு கூடுதல் ரூ.10 பணம் கேட்டதால் கோபமடைந்த வாலிபர், இராணிப்பேட்டை மதுபானக் கடையின் பேடிஎம் எந்திரத்தைத் தூக்கிச் சென்றார்.

மதுபானக்கடையில் பாட்டிலுக்கு கூடுதல் ரூ.10 பணம் கேட்டதால் கோபமடைந்த வாலிபர், இராணிப்பேட்டை மதுபானக் கடையின் பேடிஎம் எந்திரத்தைத் தூக்கிச் சென்றார். பின்னர் அது மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
மதுபானக்கடையில் பாட்டிலுக்கு கூடுதல் ரூ.10 பணம் கேட்டதால் பேடிஎம் எந்திரத்தைத் தூக்கிக் கொண்டு ஓடிய வாலிபர்

இராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை பகுதியில் அரசு மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு விற்பனையாளர் மற்றும் கண்காணிப்பாளர் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மதுபாட்டில் வாங்கியுள்ளார். அதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக ஊழியர்கள் கேட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த வாலிபர், கடை ஊழியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன், கல்லாப் பெட்டி அருகே வைக்கப்பட்டிருந்த பேடிஎம் எந்திரத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனால் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாமல் கடையின் விற்பனை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இது குறித்து ஊழியர்கள் சிப்காட் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடைப்படையில் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணைக்குப் பயந்த வாலிபர், மற்றொரு வடமாநில இளைஞரிடம் எந்திரத்தைக் கொடுத்து கடையில் ஒப்படைக்கச் செய்தார். இதையடுத்து எந்திரம் மீண்டும் கடையிடம் ஒப்படைக்கப்பட்டது. 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50