உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

குன்னுர் மலைப்பாதையில் சிக்கி தடுப்பு சுவரில் மோதிய பேருந்து

குன்னூர் மலைப்பாதையில் குறுகலான வளைவில் திரும்ப முடியாமல் தனியார் சுற்றுலா பேருந்து தடுப்புச் சுவரில் மோதியது.

குன்னூர் மலைப்பாதையில் குறுகலான வளைவில் திரும்ப முடியாமல் தனியார் சுற்றுலா பேருந்து தடுப்புச் சுவரில் மோதியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
குன்னுர் மலைப்பாதையில் சிக்கி தடுப்பு சுவரில் மோதிய பேருந்து

குன்னூரில் இருந்து கோத்தகிரி செல்லாமல் மேட்டுப்பாளையம் செல்வதற்கு வண்டிச்சோலை - அளக்கரை மலைப்பாதையைப் பல வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சாலையில் கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வேன்கள் மட்டுமே எளிதாகச் செல்லும் வகையில் பல இடங்களில் குறுகலான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்நிலையில், இன்று காலை அந்த மலைப்பாதையில் வந்த தனியார் சுற்றுலா பேருந்து, வண்டிச்சோலை - அளக்கரை கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது பேருந்தின் நீளம் மற்றும் சாலையின் குறுகலான தன்மை காரணமாக வளைவில் திரும்ப முடியாமல், சாலையோர தடுப்புச் சுவரில் மோதி சிக்கிக்கொண்டது. இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், வாகனங்கள் கோத்தகிரி வழியாக இயக்கப்படுகின்றன. இந்த விபத்தில் சிக்கிய பேருந்தை மீட்கும் பணிகள் நடைபெற்றன. இந்த மலைப்பாதையில் பெரிய பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி உள்ளதா என்பதை ஆய்வு செய்து, தேவையான இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50